மதிப்பெண்ணிற்காக’ மதிப்பான பெண்னையோ/ஆணையோ இகழ்ந்து விடாதீர்!படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லை என்பதனை அனைவரும் புரிந்து நடக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் படித்தால் மட்டும் போதாது படிப்புடன் கூடிய திறமைகளை வளர்த்துக்கொள்ளவது மிக முக்கியமாக இருக்கின்றது. அதிக மதிப்பெண் எடுப்பது அடுத்த கட்ட கல்விக்கு உதவுகின்றதே தவிர வேறு எதற்க்கும் உதவாது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

யாருடனும் உங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டு பேச வேண்டாம். ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு தனி திறமை இருக்கும் அதனை புரிந்து கொண்டு அதற்க்கு ஏற்றவாறு வாழ்கையை அமைத்து கொடுப்பது சிறப்பு.

பல்வேறு சாதனையாளர்கள் பள்ளி படிப்பை சரி வர முடிக்காமலே உயர்ந்த இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு படிப்பில் இருந்த ஆர்வத்தை காட்டிலும் திறமையின் மீது வைத்திருந்த நம்பிக்கை அவர்களை உச்சத்திற்க்கு உயர்தியது. சச்சின் டெண்டுல்கர், பில்கேட்ஸ் போன்றவர்கள் படிப்பை பாதியில் விட்டவர்கள். இவர்களை தெரியாத நபர்கள் எவரும் இருக்க இயலாது. இவர்களின் முயற்சி மற்றும் இறை அருள் இவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தது.

12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தருனம் இது. நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளி வர இருப்பதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அதிக அல்லது குறைந்த மதிப்பெண் எடுத்தாலோ அவர்களை தட்டிக்கொடுத்து. அவர்களை ஊக்க படுத்துங்கள் தோல்வி அடைந்தாலும் கூட அவர்களை ஆறுதல் படுத்துவதுடன் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் தோல்வியை கண்டவர்கள் தான் அதிகளவில் உச்சத்தில் இருக்கின்றனர். மாறாக யாரும் இழிவு படுத்தி அல்லது மற்றவர்களை உங்கள் பிள்ளையோடு ஒப்பிட்டு பேசுவது போன்றவற்றை தயவு செய்து செய்துவிட வேண்டாம். இறைவன் அனைவருக்கும் நன்மையே நாடுவானாக.

-Mohamed Salih M.R
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.