மாயமான எகிப்து விமானம் வெடித்து சிதறியதாக தகவல்...எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு பாரீஸில் இருந்து  கிளம்பி மாயமான எகிப்து ஏர் விமானம் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து ஏர் நிறுவன விமானமான எம்.எஸ். 804 பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து 59 பயணிகள், 7 ஊழியர்களுடன் புறப்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.09 மணிக்கு கிளம்பியது.

எகிப்து வான்வெளி பகுதியில் நுழைந்து 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது குறிப்பிட்ட விமானம் இரவு 2.45 மணியளவில் ராடாரில் இருந்து மாயமாகியுள்ளது. மாயமானது. மாயமான விமானத்தை தேடும் பணியில் எகிப்து ராணுவம் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 3 மணிக்கு கெய்ரோ விமான நிலையித்தில் தரையிறங்க வேண்டிய விமானம் மாயமானது. இந்நிலையில் அந்த விமானம் வெடித்து சிதறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.