முத்துப்பேட்டையில் ஆசிரியரின் பைக்கிற்கு தீ வைப்புமுத்துப்பேட்டையில் ஆசிரியரின் பைக்கிற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல். இவர் பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அங்குள்ள காவலர் குடியிருப்பு எதிரே உள்ள தனக்கு சொந்தமான கடையின் முன் தனது பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றிருந்தார். சிறிது நேரத்தில் பைக் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் பைக் முழுவதும் எரிந்து நாசமானது. இந் நிலையில் அந்த இடத்தில் சோதனை செய்து பார்த்தபோது பைக் அருகே பெட்ரோல் கேன் ஒன்று கிடந்தது. இதனையடுத்து மர்ம நபர்கள் பைக்கிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது. இது குறித்து ஆசிரியர் சிங்காரவேல், முத்துப்பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.