பெண்களே அல்லாஹ்வை அஞ்சிகொள்ளுங்கள்!



தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் , தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் . தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும் . தமது கணவர்கள் ,தமது தந்தையர் ,தமது கணவர்களுடைய தந்தையர் , தமது புதல்வர்கள் ,தமது சகோதர்களின் புதல்வர்கள் ,தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் , ஆண்களில் (தள்ளாத வயதின் கரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் , பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம் .அவர்கள் மறைந்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்க்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே ! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் ! இதனால் வெற்றியடைவீர்கள் !
திருக்குர் ஆன் 24:31)
பெண்களே! உங்களுடைய சொர்க்கம் நரகம் உங்கள் கணவர்களுடைய பிரியத்தைப் பொறுத்தே இருக்கிறது .(அல்ஹதீஸ்)
தனது கணவனை மோசடி செய்து வாழ்க்கை நடத்தும் பெண் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்தவள் அல்ல !
நூல்: அபூதாவூது )
கணவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய பெண் , நன்றி செலுத்தாமல் வாழ்வாலேயானால் கியாம நாளில் இறைவன் அவளைக் கண் கொண்டு பார்க்க மாட்டான் .
நூல்: தப்ரானி )
பெண் மறைமுகமாக இருக்க வேண்டியவள் , அவள் வெளியே வருவதை எதிர் நோக்கி ஷைத்தான் (அவள் வீட்டு வாசலில்) நின்று கொண்டிருக்கிறான் . ஆனால் வீட்டில் இருப்பவள் இறைவன் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள் .
நூல்: திர்மிதி)
வேடிக்கை பார்ப்பதற்காக ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே வருவானாள் அவளுடைய பெண்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது .சில சந்தர்ப்பங்களில் விபரீதம் ஏற்பட்டு விடுகிறது.
(அல்ஹதீஸ்)
வேடிக்கை என்பதின் விளக்கம் : சில பெண்கள் வெளியூர் சென்று கந்தூரி விழ , அல்லது வேற ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது , நடக்காத கூத்துக்கள் நடக்கிறது . தவறுகள் ஏற்பாடு வாய்ப்புகள் இருக்கிறது . கணவருடன் போவது என்பது அது வேறு , அதை குறிக்கவில்லை அந்த ஹதீஸ் . வேடிக்கை பார்க்க போகும் பெண்கள் என்றுதான் கூறுகிறது .
ஒழுக்கத்தை பேணவேண்டிய பெண்கள் , ஒழுக்கம் கெட்டு போவதை இன்று நாம் பார்க்கிறோம் . கற்ப்பை பேண வேண்டிய பெண்கள் , கற்ப்பை இழந்து கணவன்மார்களுக்கு துரோகம் செய்யும் சில பெண்களை இன்று நாம் நம் சமுதாயத்தில் பார்க்கிறோம். சில பெண்கள் மானத்தை இழந்து அவர்களின் குடும்ப மரியாதையை காற்றில் பறக்கவிடுகிறார்கள் . அற்ப சுகத்திற்க்காக இச்சைகளை தீர்த்து கொள்வதற்காக எதையும் பெரிதாக நினைக்காமல் சர்வசாதரணமாக நடந்து கொள்கிறார்கள் சில கேடுகெட்ட பெண்கள் . மாற்று மத சகோதர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை வந்து விட்டது . "எங்கள் மதத்தில் தான் சில பெண்கள் மோசமாக நடக்கிறார்கள் ,நடத்தை கெட்டவர்களாக ஆளாகிறார்கள் " உங்கள் சமுதாயத்திலும் இப்படியா என்று கேட்க்கும் அளவுக்கு சில முஸ்லிம் பெண்கள் நடக்கிறார்கள் . வேதனயும் , மன வலியாக இருக்கிறது . கொஞ்சம் கூட அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் இந்த பெண்கள் தவறான பாதையில் செல்வது என்ன என்று சொல்வது இவர்களை ? போதையில் தள்ளாடும் சில முஸ்லிம் வாலிபர்கள் அவர்களுக்கு இந்த மது ஹலாலாஹி விட்டதா ?
சில குடும்ப பெண்களின் நிலைகளை சொன்னால் ரொம்ப அசிங்கமாக இருக்கிறது. கணவன்மார்கள் வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்க போகிறார்கள் . ஆனால் சில இவர்களின் மனைவிமார்கள் எல்லா வித கூத்துக்கள் செய்கிறாகள் . இவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படவில்லை ,அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படவில்லை , கணவன்மார்களுக்கும் கட்டுப்படவில்லை . அவர்கள் இஷ்ட்டத்துக்கு அலைகிறார்கள் ,அன்னியவர்களிடம் சர்வசாதரணமாக பழகிறார்கள். ஆனால் நம் சமுதாயம் எங்கே போகிறது என்று தெரியவில்லை ? சில ஊர்களில் நிலைமைகள் ரொம்ப மோசமாக இருக்கிறது. இந்த பெண்களுக்கு எப்படி அல்லாஹ்வின் அச்சத்தை ஊட்டுவது ?
அல்லாஹுதஆலா தன் திருமறையில் விபச்சாரத்தைப் பற்றி கூறும்பொழுது :
" நீங்கள் விபச்சாரத்தில் பக்கம் நெருங்காதீர்கள் என்றுதான் கூறுகிறான்"
விபச்சாரம் செய்யாதீர்கள் என்று கூறவில்லை , அந்த பக்கம் கூட நெருங்காதீர்கள் என்று அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான் . அந்த பக்கம் கூட நாம் தலை வைத்து படுக்க கூடாது .
இந்த வட்டியையும் சில முஸ்லிம்கள் ஹலாலாக்கி விட்டார்களா ? சிலரின் வாதம் இந்த வட்டி பேங்கில் வாங்கினால் தவறும் எதுவும் இல்லையாம் , அவர்கள்தான் கொடுக்கிறார்கள் ஏன் அதை வாங்க கூடாது என்று சிலரின் வாதம் . சில விளக்கம் தருகிறார்கள் இது அவர்களுக்கு அல்லாஹ்வுக்கும் . சில பெண்கள் கந்து வட்டிக்கு வாங்கி பெரும் சிக்கல்களில் மாட்டி கொள்கிறார்கள் . கந்து வட்டிக்கு கொடுப்பவன் அவன் ஒரு ரௌடியாகதான் இருக்க முடியும் அந்த தொழிலை அவன் தான் செய்ய முடியும் . சில பெண்கள் அறியாமல் புரியாமல் உடனே பணம் கிடைகிறது என்று இந்த கந்து வட்டிக்கு பணம் வாங்குகிறார்கள் , பிறகு அவர்கள் பல தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் ,பாலியல் தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பது ஒரு பெரிய வேதனை. இதனால் சில விபரீதங்கள் நடக்கிறது என்பதில் ஐயம் இல்லை.
இதுபோன்ற பாவமான காரியங்களிருந்து விடுபட ஒரு வழி இஸ்லாம் காட்டிய வழி முறைதான் , ஈமான் உறுதியும், இறையச்சமும் இருந்தால் நிச்சயமாக இவ்வுகலத்திலும் , மறு உலகத்திலும் நமக்கு ஜெயம்தான் என்பதில் துளிகூட ஐயம் இல்லை.
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் , பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான் . அவற்றின் கீழ்பகுதியில் ஆறுகள் ஓடும் . அதில் நிரந்தரமாக இருப்பார்கள் . நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன . அல்லாஹ் வின் பொருத்தம் மிகப் பெரியது . இதுவே மகத்தான வெற்றி.
அல்குர் ஆன் 9:72)
அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது ! நாம் கொடுக்கும் வாக்குகளை போன்று அல்ல . இந்த உலகம் நிலை யானது அல்ல எனபது சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை . இது அற்ப வாழ்க்கை ! அற்ப சுகதிருக்காக ஒரு நிலையான அதிகம் சுகம் தரும் சுவனத்தை நாம் இழப்பதா , ? சிந்தித்து பாருங்கள்!
அதேநேரத்தில் , சில சொல்லவேண்டிய விடயங்கள் இருக்கிறது:
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளை கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் ! அவர்களே குற்றம் புரிபவர்கள் .
அல்குர் ஆன் : 24:4)
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும் , தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.
அல்குர் ஆன்:33:58)
சில செய்திகளை நாம் அறியாமல் ,ஆராயாமல் கூறிவிடுகிறோம் ! அது எந்தளவுக்கு உண்மை அல்லது பொய் என்று கூட நமக்கு தெரியாது . நாம் அந்த விடயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
ஒருவர் அவர் செய்யாத காரியத்தை செய்தார் போன்று நம்மில் சிலர் அவதூர்களைப் பரப்பி வருவதை நாம் பார்க்கிறோம் . நம் காதில் விழும் செய்திகளை நாம் அவசியம் ஆராய வேண்டும்; அவசரப்பட்டு நாமும் பாவத்துக்கு ஆளாக கூடாது .
அல்லாஹ் மிக அறிந்தவன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.