நீங்கள் வியக்கும் வகையில் கொலஸ்ட்ராலை அகற்றக்கூடிய உபகரணம் (வீடியோ)இதயத்தின் இரத்தக்குழாய்களில் காணப்படும் அடைப்புக்களை இரு நுண்ணிய உபகரணத்தை செலுத்தி ‘உறிஞ்சி இழுக்கும்’ தொழில்நுட்பத்தின் மூலம் எவ்வாறு வெளியேற்றலாம் என்பதை இந்த வீடியோ காட்டுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இதய நோயாளிகள் பெரும் நன்மை அடையமுடியும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் இலகுவான இந்த தொழில்நுட்பத்தில் சிறிய பலூன் வடிவிலான புரி (thread) ஒன்று இரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ள இடத்தை அடையும் வரை செலுத்தப்படுகிறது. உறிஞ்சி இழுக்கும் உபகரணமும் செலுத்தப்படுகிறது. இது அடைப்பு உள்ள இடத்தை அடைந்ததும் பலூன் வெடித்து அடைப்பு பதார்த்தங்களை உறிஞ்சியினுள் தள்ளுகிறது. இந்த உறிஞ்சியினுள்ளே செல்லும் அடைப்பு பதார்த்தம் பின்னர் சிறு துண்டுகளாக சிதறடிக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரத்த குழாய்களில் உள்ள கொலஸ்திரோல் அடைப்புக்களை அகற்றமுடியும் என்றும் கருதப்படுகிறது. உறிஞ்சி இழுக்கும் இந்த தொழில்நுட்பத்தை போல, கொலஸ்திரோலை சிறு துண்டுகளாக வெட்டும் உபகரணம் இரத்தக்குழாய்களின் உள்ளே செலுத்தப்பட்டு பின்னர் அவை உறிஞ்சி இழுக்கப்படமுடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பின்னர் இந்த உபகரணம் வெளியே எடுக்கப்படும்போது இரத்த சுற்றோட்டம் எவ்வித தடங்கலும் இன்றி நடைபெறும். ஒரு சிறிய கமராவை பயன்படுத்தி சத்திர சிகிற்சை நிபுணர்கள் இந்த முறையை திரையில் கண்காணிக்கமுடியும்.

இன்னமும் இந்த ‘உறிஞ்சி இழுக்கும்’ தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரவில்லை. இதன் நன்மை தீமைகள் பற்றி ஆய்வுகள் நடைபெறுகின்றன.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.