உங்கள் குழந்தையின் படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்தால் சிறை!உங்களது குழந்தைக்கு கூட தனிப்பட்ட உரிமை உண்டு என்று உங்களுக்கு தெரியுமா? இதனை வலியுறுத்த தனது குழந்தையின் மோசமான புகைப்படங்களை பேஸ்புக்-ல் பதிவு செய்யும் பெற்றோர்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்குமாறு ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

ஒருவருடைய குழந்தை வளர்ந்து தனது சிறுவயது புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வகை செய்யும் அந்த சட்டம்.

பெற்றோர்கள் குழந்தையின் தனிப்பட்ட உரிமையை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 35,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பல பெற்றோர்களுக்கு தங்களது குழந்தை செய்யும் வேடிக்கையான விஷயங்களை வீடியோ எடுத்து பேஸ்புக்-ல் பகிருவதை பழக்கமாக மாறியுள்ள நிலையில், இந்த சட்டத்தின் மூலம் பிரான்ஸ் அரசாங்கம் அதிகமான வருவாயை ஈட்டலாம் என கூறப்படுகிறது.

குழந்தையின் 5 வயதிற்கு முன்பே பெற்றோர்கள் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 200 புகைப்படங்களை பேஸ்புக்-ல் பதிவு செய்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது, பிரிட்டனில் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.