பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் டெப்பாசிட் கூட பெற முடியாது! (விரிவான தகவல்)கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவை இடம்பெற்று இருந்தன. இதனை அவர்கள் சில சமயங்களில் மெகா கூட்டணி என அழைத்தும் வந்தனர். பின்னர் தொகுதி பங்கீட்டின் படி மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாஜகவை சேர்ந்த கருப்பு என்ற முருகானந்தம் போட்டியிட்டார்.

இதில் (ஆறு சட்டமன்ற தொகுதியில்) இவர்கள் பெற்ற வாக்குகள் வெறும் 58,521 வாக்குகள் மட்டுமே அதாவது இதேதொகுதியில் அதிமுக தனித்து போட்டியிட்டு 5,10,307 வாக்குகளும் திமுக 3,66,188 வாக்குகளும் பெற்றன. இதுவும் கூட பாஜகவின் தனி பலத்தால் பெற்றது அல்ல மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் கூட்டணி பலத்தால் பெற்ற வாக்குகள் ஆகும்.

தற்பொழுது பாஜக தரப்பில் தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பலமான கூட்டணி அமையபெறவில்லை இதனால் பாஜக இந்த தேர்தலை தமிழகத்தில் தனது பலத்தை பரிசோதனை செய்வதற்காக மட்டுமே எதிர்கொள்கின்றது. அந்த வகையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தனக்கு இருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையை அறிவதற்காக கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கருப்பு முருகானந்தத்தை மீண்டும் களமிறக்கியுள்ளது. கூட்டணி பலம் இல்லாமல் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் காணும் பாஜகவிற்கு எப்படி பார்த்தாலும் சில ஆயிரம் ஓட்டுகள் வாங்குவதே சவாலான ஒன்று. இந்த சில ஆயிரம் ஓட்டுக்களை அவர்கள் பெற்றாலும் டெப்போசிட் கூட அவர்களுக்கு கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை.

ஏனெனில் கடந்த முறை பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பெரிய கட்சியாக கருதப்படும் தேமுதிக மற்றும் மதிமுக ஒன்றாக இம்முறை மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றும் பாமக தனித்தும் இதே பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுவதால் கிட்டதட்ட பாஜக டெபோசிட் கூடபெறாது என்பது தெளிவாகிவிட்டது. மேலும் சிவசேனா கட்சி சார்பில் கள்ளர் சமூகத்தை சேர்ந்த போஸ் போட்டியிடுவதால் தேவர் சமூகத்தை சேர்ந்த கருப்பு முருகானந்தத்திற்கு முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகள் முழுமையாக கிடைக்காது. இதனால் பாஜக டெப்போசிட் இழப்பது உறுதி என்றே கூறலாம்.

 

Thanks To: AdiraiExpres
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.