மேற்குவங்க 'சிவில் சர்வீஸ்' தேர்வில் முதலிடம் பிடித்தார் நாசிர் ஹுசைன் !மேற்குவங்கத்தில் 'சிவில் சர்வீசஸ்' தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து முஹம்மத் நாசிர் ஹுசைன் சாதனை படித்துள்ளார்.


பல்லாயிரம் பட்டதாரிகள் எழுதிய இத்தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது.

113 பேர் மட்டுமே வெற்றிபெற்ற இத்தேர்வில், முதலிடம் பிடித்துள்ளார், நாசிர் ஹுசைன்.

தேர்வான 113 பேரில் 13 பேர் முஸ்லிம்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தியாகும், அதிலும் முதல் 25 இடங்களுக்குள் 4 முஸ்லிம்கள் இடம் பிடித்துள்ளனர்.

வடக்கு பர்கானா மாவட்டத்தின் 'மலிக்பேரியா' கிராமத்தை சேர்ந்த நாசிர் ஹுசைனின் தந்தை ஒரு விவசாயி என்பதும், குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 'யூஜிசி' தேர்வில் வெற்றி பெற்ற அவருக்கு 'பாரத ஸ்டேட் வங்கி'யில் கிடைத்த வேலையை (வட்டி பரிவர்த்தனை காரணமாக) ஏற்க மறுத்த நாசிர் ஹுசைன், தற்போது "Indian Council of Agricultural Research " நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.