திருவாரூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி காவியா சிறப்பு பேட்டி.ஐ.ஏ.எஸ் எழுதி கலெக்டர் ஆகி ஒரு நேர்மையான திறமையான அதிகாரியாக பணியாற்றுவேன்! திருவாரூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி காவியா சிறப்பு பேட்டி.

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவி காவியா 12-வகுப்பு தேர்வில் 1181 மார்க் எடுத்து மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார், பாடம் வாரியாக மார்க் பெற்ற விபரம் தமிழ்-189, ஆங்கிலம்-194, பொருளுவியல்-199, வணிகவியல்-200, கணக்குபதிவியல்-199, வணிகவியல்200 ஆகமொத்தம் 1181-மார்க் எடுத்துள்ளார.; மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி காவியாவை பள்ளியின் தலைமையாசிரியை உமாமகேஷ்வரி மற்றும் ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர், பின்னர் மாணவி காவியா நிருபர்களிடம் கூறுகையில்;: ஆரம்ப கல்வி முதல் இந்த பள்ளியில்தான் படித்து வருகிறேன் பள்ளியின் ஆசிரியைகளின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து நல்ல மதிப்பெண் பெற்று வருக்கிறேன், பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு நல்ல மார்க் எடுத்தும் வேறு பள்ளிக்கு செல்லும் செயலை என்னைபோன்ற மாணவிகள் தவிற்க்க வேண்டும், நான் தொடர்ந்து இந்த பள்ளியில் படித்ததுநாள்தான் இன்றைக்கு இந்த 12-ம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற முடிந்தது, என்னோட ஆசை சி.ஏ படித்து பின்னர் ஐ.ஏ.எஸ் எழுதி கலெக்டர் ஆகி ஒரு நேர்மையான திறமையான அதிகாரியாக பணியாற்றுவேன் என்றார். அப்பொழுது அவரது தந்தை சேகர், தாய் முத்துக்குமாரி மற்றும் பள்ளியின் ஆசிரியைகள் உடன் இருந்தனர். மேலும் பள்ளியின் மாணவி சிவபூரணி 1152 மார்க் எடுத்து பள்ளியில் இரண்டாம் இடமும், மாணவி பெனாசீர் பானு 1151 மார்க் எடுத்து மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். இதேபோல் பள்ளியில் 95-மாணவிகள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

Kavya

 

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.