இலவசங்கள் மட்டுமே கட்சிகளின் குறிக்கோள்: எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு



இலவசங்களை விநியோகம் செய்வது மட்டும் தமிழக அரசியல் கட்சிகளின் குறிக்கோளாக இருக்கிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் குற்றம் சாட்டினார்.


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் எஸ்.நஜிமாபேகம், மத்திய தொகுதி வேட்பாளர் எம்.ஜாபர்சுல்தான் இப்ராஹிம் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி மதுரை காஜிமார் தெருவில் நேற்று அவர் பேசியது: பிற கட்சிகள் கட்டப் பஞ்சாயத்து, கொள்ளை, கமிஷனில் ஈடுபடுபவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன. நேர்மையான வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள் என்றார்.


முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இலவசங்களை மட்டுமே திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே ரூ. 4 லட்சம் கோடி அரசுக்கு கடன் உள்ள நிலையில் மேலும் கடன் சுமை ஏற்றுவதை மட்டுமே அதிமுக குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவது ஒவ்வொரு அரசியல் கட்சியின் கடமை. எனவே, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய மாட்டோம் என ஒவ்வொரு கட்சியினரும் அறிவிக்க வேண்டும். அந்தந்த கட்சி வேட்பாளர்களும் அதை அறிவிக்க வேண்டும் என்றார்.thehlan_2847351f

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.