இலங்கை நாடாளுமன்றத்தில் கைகலப்பு: ஒருவர் மருத்துமனையில் அனுமதிஇலங்கை நாடாளுமன்றதில் இன்று நடந்த கைகலப்பில் உறுப்பினர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டது தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது கருத்தை தெரிவித்துக்கொண்டிருக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலாப்பாக மாறியது.

இதன்போது தாக்குதலுக்குள்ளான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப் சமரசிங்க காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, இந்த விஷயம் தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அணியிருனக்கிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சபாநாயகர் கரு ஜயசூர்ய நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார்.

அவை நடவடிக்கைகள் மீண்டும் துவங்கியதையடுத்து, அவையின் மத்தியில் கூடிய துணை அமைச்சர் பாலித்த தேவப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அவையின் மத்தியில் கூடிய உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுப்பட்டனர்.

நாடாளுமன்றத்தின் பதற்ற நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்குடன், அவை நடவடிக்கைகளை நாளை வரை சபாநகர் கரு ஜயசூர்ய ஒத்தி வைத்தார்.

இன்றைய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் சபாநாயகர் பின்னர் அறிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.