பள்ளிக்கல்வி துறையின் அதிரடி அறிவிப்புகள் - பெற்றோர்கள் பொதுமக்கள் வரவேற்பு ...!வரும் ஜூன் மாதம் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில்,  பள்ளி கல்வி துறையின் மாணவ மாணவிகளுக்கான நடை முறை அறிவுரைகளை இன்று வெளியிட்டுள்ளது. இதோ கீழே குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்கள் சில:-

மாணவர்கள் பைக்குகளில் (இரு சக்கர வாகனங்கள்) பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது.

செல் போன் எடுத்து வர கூடாது.

மேற்குறிப்பிட்ட அறிவுரைகளுக்கு முரணாக நடக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை. செல்போன் எடுத்து வந்தால், அதை பறிமுதல் செய்து பெற்றோர்களை அழைத்து அறிவுறுத்தல் மூலம் திருப்பி கொடுக்கப்படும். விதிமுறைகளை மீறும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதால் தவறான நடைமுறைகள், வரம்பு மீறும் செயல்கள் தடுக்கப்படும்.

பள்ளி கல்வி துறையின் இந்த அறிவிப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் அனைவராலும் மிகுந்த வரவேற்பு அளிக்கபடுகிறது. வீட்டுக்கு அடங்காத மாணவர்களின் செயல்களால் இன்னல் அடைந்த பெற்றோர்கள், இந்த அறிவிப்பால் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர் என்பதே அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் உண்மை.
மேலும், மாணவர்களின் கல்வி திறன் மற்றும் ஒழுக்கம் மேம்படும் என்பது உறுதி. பெரும்பாலான வாகன விபத்துகள் நடக்காமல் இருக்க இது பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த பதிவின் மூலம், பள்ளி கல்வித்துறைக்கு பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கபடுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.