“கலைஞரின் மோடி துதி… மக்களே உஷார்”: பேராசிரியர் அருணன்கலைஞரின் மோடி துதி, நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை என பேராசிரியர் அருணன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய முகநூலில்,

“மோடியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார் கலைஞர்: “அவர் நிர்வாகத்திறமை மிக்கவர், எதையும் துணிச்சலோடு செய்யக்கூடியவர், எனது பழைய நண்பர்”!

தமிழகத்தின் மதச்சிறுபான்மையோர் இவரின் இந்தப் பேச்சை கவனத்தில் கொள்ள வேண்டும். தப்பித்தவறி திமுக வெற்றிபெற்றால் அதன்ஆட்சி மோடிக்கு காவடி தூக்குகிற ஆட்சியாகத்தான் இருக்கும்.

குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை “அது வேறொரு மாநில விவகாரம்“ என்று சொன்ன புண்ணியவாளர் தான் இவர்.

ஸ்ரீரங்கம் தேர்தலுக்கு பாஜக ஆதரவை வேண்டியவர்தான் இவர். “திமுகவோடு பாஜக உறவு வைக்க வேண்டும்“ என்று சு.சுவாமி சொன்ன போது மறுக்காதவர்தான் இவர்.

இதையெல்லாம் மனதில் கொண்டால் இவரது மோடி துதியின் அர்த்தம் மேலும் தெளிவாகும்.

மதச் சிறுபான்மையோரே, சமூக நீதியாளர்களே உஷார்… உஷார். மதச்சார்பற்ற அரசியலை உயர்த்திப்பிடிக்க தோற்கடிக்கப்பட வேண்டியது அதிமுக மட்டுமல்ல… திமுகவும்தான்” என எழுதியிருக்கிறார் .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.