பா.ஜ.கவின் மிஸ்ஸான மிஸ்டுகால் ஓட்டுகள்கடந்த வருடம் பா.ஜ.க தமிழ்நாட்டில் தங்கள் கட்சியில் 50 லட்சம் பேர் மிஸ்டுகால் மூலம் உறுப்பினராக சேர்ந்துள்ளனர் என்று கூறியிருந்தது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு தேசிய கட்சியான பா.ஜ.க விற்கு 12 லட்சம் வாக்குகள் கூட கிடைக்கவில்லை. இந்த 12 லட்சம் என்பது பா.ஜ.க கூறிய 50 லட்சத்தில் 25% ஆகும். இன்னும் சொல்லப்போனால் இந்த தேர்தலில் போட்டியிட்ட 234 தொகுதிகளில் அக்கட்சியால் ஒரு தொகுதியை கூட வெற்றிபெற முடியவில்லை.

தமிழக தேர்தலுக்காக பிரசாரத்திற்கு வந்த மத்திய அமைச்சர்களும், மோடியின் வருகையும் பா.ஜ.க விற்கு எந்த ஒரு முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை.

இருந்தாலும் கன்னியாகுமரியில் பா.ஜ.க கட்சியின் ஓட்டுக்கள் அ.தி.மு.க வினை பின்னுக்கு தள்ளி நான்கு தொகுதிகளில் அதனை இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த தேர்தலில் ஒட்டு மொத்த வாக்குகளில் 2.9% வாக்குகளை பா.ஜ.க பெற்றுள்ளது. இது பா.ஜ.க விற்கு ஏற்கனவே இருந்த 2.2.% வாக்குளில் இருந்து கிடைத்த முன்னேற்றம் எனலாம்.

50 லட்சம் உறுப்பினர்கள் இருந்தும் பா.ஜ.க வின் தோல்விக்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு அந்த 50 லட்சம் பேரும் கட்சிக்குள் உள்வாங்கப்படவில்லை என்று பதிலளித்துள்ளார் தமிழிசை சவுந்தர்ராஜன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.