மகனின் பட்டமளிப்பு விழாவில் தேம்பி தேம்பி அழுத சவுதி மன்னர்சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தனது மகன் பட்டம் பெறுவதை கண்ட தந்தை ஒருவர் ஆனந்த கண்ணீருடன் தேம்பி தேம்பி அழுதுவிட்டார்.
ஆம் அவர் வேறு யாருமில்லை, அவர் தான் உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தி மன்னர் சல்மான்,

சல்மானின் இளைய மகன் ரக்கான், ரக்கானின் பட்டமளிப்பின் போது தான் சல்மான் தேம்பி தேம்பி அழுதுவிட்டார்.
80 வயதிலும் துடிப்பு மிகுந்த இளைஞனை போன்று வீரத்தோடும், விவேகத்தோடும் ஆட்சி செய்து எதிரிகளின் ஈரக்குலையை நடுங்க செய்து, உலக முஸ்லிம்களின் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கும் சல்மான் தேம்பி தேம்பி அழுத சம்பவம் அவர் ஓர் மன்னர் என்பதை காட்டிலும் அவரும் ஓர் சராசரி தந்தை என்பதை காட்டுகிறது.
பின்னர் விழாவில் பேசிய மன்னர் சல்மான்….
ஒரு மாணவனின் தந்தையாக கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன், நான் இங்கு ரக்கானின் தந்தையாக வந்தாலும் இங்குள்ள அனைவரும் என்னுடைய பிள்ளைகளே, நீங்கள் அனைவரும் நன்றாக படித்து நம் நாட்டின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.

 

salman.jpg2_ salman.jpg2_.jpg3_
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.