குள்ளர்கள் வாழும் வினோத கிராமம் : விஞ்ஞானிகள் குழப்பம்..!!சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள யாங்சி கிராமத்தில் உள்ள 40 சதவிகித மக்கள் குள்ளமானவர்களாகவே உள்ளனர். பல்லாண்டுகளாக அந்த கிராமத்தில் குள்ள மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருப்பதற்கான காரணம் தெரியாமல் விஞ்ஞானிகள் குழம்பியுள்ளனர். 'குள்ளமனிதர்களின் கிராமம்' என்று அழைக்கப்படும் அந்தக் கிராமத்தில் பிறக்கும் குழந்தைகளில் பலருக்கு 5 முதல் 7 வயது ஆகும் நேரத்தில் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. சுமார் 60 ஆண்டு காலமாக அந்த கிராமத்தில் இந்த வினோதம் நடந்து வருகிறது. அந்த கிராமத்தில் உள்ள மக்களில் அதிக உயரமே 3 அடிதான் என்றும், குறைந்த உயரம் 2 அடி என்றும் கூறப்படுகிறது. அந்தக் கிராமத்தில் உள்ள முதியவர்கள் இதுபற்றிக் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு கோடை காலத்தில் ஒரு கொடிய நோய் அந்தக் கிராமத்தைத் தாக்கியதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். விஞ்ஞானிகள் இந்தக் கிராமத்தில் உள்ள நீர், நிலம், மணல் மற்றும் உணவு தானியங்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஆனாலும் அவர் களால் அந்தக் கிராமத்தினர் குள்ளமாக இருப்பதன் காரணத்தை அறிவியல்பூர்வமாக விளக்க முடியவில்லை. குள்ளமனிதர்கள் கிராமம் தொடர்பாக பல கதைகளும் காரணங்களும் கூறப்பட்டாலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவியல் காரணம் இன்றுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது அங்கு பிறக்கும் குழந்தைகள் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்படுவது பெருமளவு குறைந்துள்ளதாக நிம்மதியூட்டும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.