பொதுமக்களுக்கு ஒரு கவலையான செய்தி!ஜூன்1ம் தேதி முதல் சேவை வரி அதிகரிப்பு – செல்போன் கட்டணம் உயர்கிறது

ஜூன் 1ம் தேதி முதல் சேவை வரி 0.5 சதவீதம் உயர்வதை அடுத்து, செல்போன் உள்ளிட்டவற்றின் கட்டணம் அதிகரிக்க உள்ளது.

சேவை வரி தற்போது 14.5 சதவீதமாக ஆக உள்ளது. இது ஜூன் 1ம் தேதி முதல் 0.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 15 சதவீதமாக உயர்கிறது.

கிரிஷி கல்யாண் என்ற பெயரில் விதிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் கட்டணம், வேளாண் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த வரி உயர்வால், செல்போன் கட்டணம், ஓட்டல்களில் தங்குவதற்கான கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், சிணிமா திரையரங்க கட்டணம், வங்கி பரிவர்த்தனை கட்டணம் மற்றும் விமான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் அதிகரிக்க உள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்குள் சேவை வரி 2.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் மத்திய அரசின் சேவை வரி உயர்வால் நடுத்தர, ஏழை குடும்பங்கள் பாதிக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ரயில் டிக்கெட்:

இந்நிலையில், கிரடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கான சேவைக் கட்டணம் ஜூன் 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஏராளமான பயணிகள் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சேவை கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.