உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா?உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான். ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம். இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!Bawang-Putih-730x603 Brocoly Evening-Tamil-News-Paper_58025324345 mushrooms1

ப்ராக்கோலி: ப்ராக்கோலி சாப்பிட்டால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம். ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும். எனவே ப்ராக்கோலி சாப்பிட்டு, புற்றுநோயிலிருந்து விலகியிருங்கள்.

பூண்டு: ஏற்கனவே ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

கேரட்: தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

காளான்: காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.