ரியாத்தில் ஏர் இந்தியா அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதிகள் சந்திப்பு! ரியாத்- திருச்சிராப்பள்ளி இடையே நேரடி விமான சேவை கோரிக்கை!ரியாத்தில் ஏர் இந்தியா அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதிகள் சந்திப்பு

ரியாத்தில் உள்ள ஏர்-இந்தியா உயரதிகாரிகளை ரியாத்வாழ் இந்தியர்களின் பிரதிநிதிகளாக சிலர் சென்று ஏர்-இந்தியா நிறுவனத்திடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்தோம்.

தமிழ்நாட்டின் சார்பாக சென்றிருந்த அகமது இம்தியாஸ் பல்வேறு பொதுவான கோரிக்கைகள் வைத்ததுடன் குறிப்பாக திருச்சிராப்பள்ளிக்கு நேரடி விமானசேவைக்குண்டான ஏற்பாடுகள் செய்யும்படி வற்புறுத்தினார்.

திருச்சிக்கு பன்னாட்டு விமானசேவை நேரடியாக செய்வதில் விமானநிலைய சட்டதிட்டங்களில் சில சட்டசிக்கல்கள் உள்ளதனை எடுத்துக்கூறி விரைவில் அதனை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்வதாக கூறினர், அதுவரை மும்பை, சென்னைபோன்ற இடங்களில் வந்திறங்கும் பன்னாட்டு விமானங்களில் திருச்சிக்கு செல்வதற்கு ரியாத் / திருச்சி போன்ற புறப்படுமிடத்திலிருந்தே போர்டிங்பாஸ் விநியோகிக்குமாறு கேட்டுக்கொண்டதில் அதனை விரைவில் செய்துதருவதற்கு ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.