மகளே உன் கள்ள காதல் நம் குடும்பத்திற்கு ஏற்றதல்ல அறிவுரை கூறிய தாய்க்கு மகளின் பரிசுஇளைஞன் ஒருவனுடன் ஏற்பட்டிருக்கும் கள்ளக்காதலை நிறுத்துமாறு கூறிய தாயின் எச்சரிக்கையை ஜீரணிக்கமுடியாத மகள், தனது தாயைக் கத்தியினால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

பதுளை புறநகர் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பதுளைப் பொலிஸார், தலைமறைவாகியுள்ள யுவதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

கத்தி வெட்டுக்காயங்களுடன் தாய், பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மகளின் கள்ளக் காதல் குடும்பத்துக்கு ஏற்றதல்ல. இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு தாய், மகளைக் கடுமையாக எச்சரித்ததன் விளைவாக, ஆத்திரம் கொண்ட மகள் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துவந்து தனது தாயை வெட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தாயின் சகோதரரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பதுளைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.