அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்குடும்பஸ்தர்அக்கரைப்பற்று பொத்துவில் வீதி 40ஆம் கட்டை பிரதேசத்திலுள்ள வீடொன்றில், (09) காலை தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.


குணரட்ணம் ஜெயராஜ் எனும் 24வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.


இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு இத்தியடி பிரதேசத்தை சேர்ந்த தேங்காய் பறிக்கும் கூலித்தொழிலாளியான ஜெயராஜ் மட்டக்களப்பு ஆரயம்பதி பிரதேசத்தில் திருமணம் செய்து ஒரு பிள்ளையுடன் வாழ்ந்து வந்ததாகவும் சுமார் ஒரு மாத காலமாக தொழில் நிமித்தம் 40ஆம் கட்டை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த நபர், பகல் வேளைகளில் வீடொன்றில் தனிமையாக தங்கி வந்துள்ளதோடு, இரவு வேளைகளில் தனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் தூங்குவதற்காக சென்று வந்துள்ளார்.


நேற்று (08) இரவு, வழமையாக இரவில் படுக்கைக்காக செல்லும் வீட்டுக்கு ஜெயராஜ்  செல்லவில்லை.


அதனால் அவ்வீட்டுக்கார பெண் ஜெயராஜை பார்ப்பதற்காக பகல் வேளையில் தங்கும் ஒருவரும் இல்லாத திறந்த வீட் இன்று (09) காலை 7 மணியளவில்  சென்ற போது வீட்டின் மண்டபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை அவதானித்துள்ளார்.


இதனை அடுத்து, பொலிஸ் அவசர அழைப்புக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிசார் கிராமசேவை உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.


நீதிவான் விசாரணையின் பின் பிரேதபரிசோதனை மேற்கொள்ளபட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.