இந்திய முஸ்லிம் கைதிகளின் மூன்றில் ஒரு பங்கு குஜராத் சிறைகளில் உள்ளனர்மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல் படி ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் கைதிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு குஜராத் சிறையில் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

குஜராத்தின் 6 கோடி மக்கள் தொகையில் 58.6 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். இது குஜராத் மொத்த ஜனத்தொகையில் 9.7% ஆகும். குஜராத் இந்திய முஸ்லிம் ஜனத்தொகையில் 3.4% முஸ்லிம்களை கொண்டுள்ளது. ஆனால் கைதிகளின் சதவிகிதத்தில் 36.5% முஸ்லிம்கள் குஜராத் சிறைகளில் உள்ளனர்.

மொத்தமுள்ள 658 கைதிகளில் 240 பேர் குஜராத் சிறைகளில் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் 220 முஸ்லிம் கைதிகளை கொண்டு தமிழகம் இரண்டாம் இடத்தில் இருகின்றது. தமிழகமும் முஸ்லிம் ஜனத்தொகையின் சதவிகிதத்திற்கும் அதிகாமான கைதிகளை கொண்டுள்ளது.

முஸ்லிம் சிறைவாசிகளின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள உத்திர பிரதேசத்தில் 5040 குற்றவாளிகளும், 17858 முஸ்லிம்களும் விசாரணை கைதிகளாக சிறையில் உள்ளனர். ஆனால் அங்கு கைதிகளின் எண்ணிக்கை வெறும் 45 தான். உத்திர பிரதேசம் இந்திய முஸ்லிம் மக்கள் தொகையில் 22.4 % முஸ்லிம்களை கொண்டுள்ளது.
இந்திய முஸ்லிம் ஜனத்தொகையில் 5% முஸ்லிம்கள் உள்ள ஜம்மு கஷ்மீரில் 153 முஸ்லிம் குற்றவாளிகளும் 1125 விசாரணை கைதிகளும் சிறையில் உள்ளனர். இங்கு 35 முஸ்லிம்கள் கைதிகாளாக சிறையில் உள்ளனர்.

முஸ்லிம் சிறைவாசிகளின் எண்ணிக்கை குறித்து சமூக போராளிகள் கருத்து தெரிவிக்கையில் 1985 இல் அமல்படுத்தப்பட்ட Prevention of Anti-Social Activities Act மற்றும் பொடா சட்டங்கள் சிறுபான்மையினர்களுக்கு எதிராகவே பெரிதும் பயன்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வழக்கறிஞர் சம்ஷத் பதான் கூறுகையில் இது போன்ற சட்டங்கள் சிறுபான்மையினர் மீது செலுத்தப்படுவது அவர்கள் மனதில் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவதற்குத் தான் என்று கூறியுள்ளார். 2000 க்கு பிறகு முஸ்லிம்களை விசாரணை என்கிற பெயரில் கைது செய்வதும் கைது செய்தவர்களை தங்களுக்காக உளவு பார்க்க வற்புறுத்துவதும் அப்படி செய்ய மறுப்பவர்களை போலியான தீவிரவாத வழக்குகளில் சிக்கவைப்பதும் வாடிக்கையாகிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.