மரண அறிவிப்பு: "இக்பால் ஹாஜியார்"



அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் மு.கி.ம. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும் ,ஹாஜி அ.ஜ.அப்துல் ரஜாக், மர்ஹும் அ.ஜ.அஹமது கபீர், ஹாஜி மஹ்மூத்,
ஹாஜி அ.ஜ. தாஜுதீன், ஹாஜி அ.ஜ.ஷேக் முஹம்மது, ஹாஜி அ.ஜ.தாஜுதீன்,ஹாஜி அ.ஜ. மீராஷாஹிப் இவர்களின் சகோதரரும், ஹாஜி JI ஷேக் முஹம்மது அவர்களின் தகப்பானரும், ஹாஜி ஜமால் முஹம்மது அவர்களின் மாமனாருமாகிய அ.ஜ. இக்பால் ஹாஜியார் அவர்கள் இன்று மாலை அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மரணித்த இக்பால் ஹாஜியார் அவர்கள் பல்வேறு சமூக பணிகளின் தங்களை இணைத்து கொண்டு பங்காற்றியவர் ஆவார். குறிப்பாக சென்னையில் பிரசித்தி பெற்ற மன்னடி மஸ்ஜிதே மஃமூர், அதிரையில் உள்ள மதரசா ரஹ்மானியா, புதுப்பள்ளி ஆகியவைகளில் செயலாளர்ராக சிறப்புற செயலாற்றி வந்துள்ளார். முன்னதாக மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசலின் முத்தவல்லியாக செயல்பட்டு வந்த அவர் பல்வேறு சமூக பணிகளில் ஓய்வரியாமல் உழைத்தவர் ஆவார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்த அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

Thanks To: Adirai Xpres
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.