பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முஸ்லிம்களுக்கு அறிய வாய்ப்பு!பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் எந்தளவும் இல்லாத அளவிற்கு இம்முறை கடுமையான வாக்கு சிதறல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் முஸ்லிகளின் ஓட்டுக்கள் சிதறாமல் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் முகம்மது இலியாஸிற்கு விழுந்தால் அவர் வெற்றிபெறுவது உறுதியாகிவிடும். அது எப்படி முடிவும்? தங்களின் மனதிற்குள் எழும் கேள்விக்கான விடைதான் இந்த தொகுப்பு.

 

blogger-image-பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது மிகப்பெரிய அளவில் வாழுவது முஸ்லிம் சமூகம் ஆகும். அதாவது முஸ்லிம் வாக்காளர்கள் ஏறத்தாழ 35,000 பேர் உள்ளனர். முதலாம் இடத்தில் 45,000வாக்குகள் கொண்ட வெள்ளாளர் சமூகத்தினரும், இரண்டாமிடத்தில் 40,000வாக்குகள் கொண்ட முத்தரையர் சமூகத்தினரும், நான்காமிடத்தில் 20,000வாக்குகள் கொண்ட முக்குலத்தோர் சமூகத்தினரும், ஐந்தாமிடத்தில் தலா 10,000 வாக்குகள் கொண்ட கிரிஸ்த்துவர்கள், கோனார் மற்றும் தலித் சமூகத்தினரும், இதர சிறியளவிலான சமூகத்தினர் 52,000 பேர் உள்ளனர்.

இதில் மகேந்திரன் (காங்கிரஸ்), சி.வி.சேகர் (அ.தி.மு.க.), கீதா கருணாநிதி (நாம் தமிழர்) ஆகிய மூவரும் வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த வாக்குகளை பிரிக்கின்றனர், லெட்சுமி பாலு (பா.ம.க) (இவரின் கணவர் பாலு முத்தரையர் சங்க தலைவர் ஆவார்), பழஞ்சூர் சஞ்சைகாந்தி (சுயேச்சை) ஆகிய இருவரும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்த வாக்குகளை பிரிக்கின்றனர், கருப்பு முருகானந்தம் (பி.ஜே.பி), போஸ் (எ) குபேந்திரன் (சிவசேனா) ஆகிய இருவரும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த வாக்குகளை பிரிக்கின்றனர், கோனார் சமூகத்தை சேர்ந்த ஒரு வேட்பாளர், தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு வேட்பாளர் என அவர்கள் சமூகம் சார்ந்த வாக்குகளை பெறுகின்றனர்.

 

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 35,000 வாக்குகளுடன் மூன்றாவது மிகப்பெரிய சமூகமான முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த முகம்மது இலியாஸ் ஒருவர் மட்டுமே கேஸ் சிலிண்டர் சின்னத்தில் தற்பொழுது தேர்தல் களம் காணுகின்றார். இஸ்லாமியர்களின் வாக்குகள் பிரிக்கப்படாமல் இவருக்கு முஸ்லிகள் ஒற்றுமையாக தங்களது வாக்குகளை அளித்தார்கள் என்று சொன்னால் நிச்சயம் இறைவனின் உதவிகொண்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து ஒரு முஸ்லிம் வெற்றிபெற்று சட்டமன்றம் செல்லலாம். இதனால் முஸ்லிம்களின் ஒற்றுமையை கண்டு பிற கட்சியினர் அச்சம் கொள்வார்கள். மேலும் அடுத்து வரக்கூடிய தேர்தல்களிலும் பிற கட்சிகள் முஸ்லிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பர்.

1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் 44,565 வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற ஏ.ஆர். மாரிமுத்து அடுத்து நடைபெற்ற 1977ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 25,993 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றிபெற்றார். இதேநிலை தான் தற்பொழுது பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மீண்டும் நிலவுகிறது. அரசியல் கட்சிகள் பல்வேறு சமூகத்தினரின் வாக்குகளை ஒன்றிற்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதின் மூலம் பிரிக்கின்றனர்.

ஆனால் முஸ்லிம் சமூகத்தின் ஓட்டுக்கள் மட்டும் போட்டி வேட்பாளர்கள் இல்லாத காரணத்தினால் பிரியவில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வது வெற்றி பெறுவதற்கு தேவையான 35,000வாக்குகளை வைத்துள்ள பட்டுக்கோட்டை முஸ்லிம்களின் கையில் தான் உள்ளது.

இறைவன் நமக்கு ஏற்படுத்தி கொடுதிற்கும் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்தி நமது சமூகத்தின் வலிமையை காட்ட ஒற்றுமையுடன் துணிந்து மறுமை வாழ்க்கை மீது நம்பிக்கை கொண்ட ஓர் இஸ்லாமிய சகோதரனுக்கு கேஸ் சிலிண்டர் சின்னத்தில் வாக்களிப்போம். இறைவன் அருளால் நிச்சயம் நாம் வெற்றிபெறுவோம் இன்ஷா அல்லாஹ்...
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.