இன்று "மே தினம்" இஸ்லாம் உழைப்பாளர்களுக்கு காட்டுகிற அக்கரையும் உரிமையும்.இன்று *மே தினம் உழைப்பாளர் தினமாம்* ஒவ்வொருவரும் வாழ்த்து கூறுகிறார்கள் .

அது வாயளவில் தான் வாழ்த்தே தவிர உள்ளத்தால் வாழ்த்து இல்லை.

ஆனால்..


இஸ்லாம் உழைப்பாளர்களுக்கு காட்டுகிற அக்கரையும் உரிமையும்.

*நபி (ஸல்) அவர்களுக்கு பணியாளராக கடமையாற்றிய அனஸ் பின் மாலிக் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்*

*“நான் நபி (ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் பணியாளராக தொழில் புரிந்தேன் என் மனம் புண்படும் படி சீ என்றோ இதை ஏன் செய்தாய் என்றோ நீ இதை இப்படிச் செய்திருக்கக் கூடாதா? என்றோ அவர்கள் எனக்குச் சொன்னதில்லை.*

(புகாரி-6038)

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “உங்களில் ஒருவரிடம் அவரது பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளரைத் தம்முடன் அமர வைத்துக் கொள்ளட்டும்*

*அவ்வாறு அவரை அமர வைத்துக்கொள்ளாவிடினும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும் ஏனெனில் அதனை அவர் சமைக்கும் போது அதன் வெப்பத்தையும், அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்.*

புகாரி-5640

*“அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை அவர்களுக்கு கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம்.*

*அவ்வாறு நீங்கள் அவர்களை சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு உதவியாயிருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் அடிமை விடயத்தில் கூறினார்கள்.*

புகாரி-30

*வியர்வை உலரும் முன் பணியாளரின் கூலியை கொடுத்து விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்*

திர்மிதி-11434

*மறுமை நாளில் நான் மூன்று பேருக்கு எதிராக வாதாடுவேன். ஒருவர் சுதந்திரமான ஒருவனை அடிமையாக்கியவன். மற்றவர் வாக்குறுதி மீறியவர் மூன்றாமவர் ஒரு பணியாளரை கூலிக்கமர்த்தி, அவனிடமிருந்து வேலை வாங்கிவிட்டு அவனது கூலியை வழங்காதிருந்தவர்.*

புகாரி-2270.

இது தான் இஸ்லாம் கூறும் உழைப்பாளர் நலனை காக்கும் உழைப்பாளர் தின வாழ்த்து.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.