தொல். திருமாவளவன் அளித்த அதிர்ச்சி செய்தி...! படங்கள் இணைப்புஎகனாமிக் டைம்ஸ் என்கிற ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் ‘மதமாற்றத்தால் தலித்களின் எண்ணிக்கை பலம் குன்றிவிடுகின்றது. இதனால் அது தீர்வு ஆகாது’ எனக் கருத்துரைத்திருக்கின்றார் தொல். திருமாவளவன்.


தலித்துகள் மீதான வன்முறை தொடர்ந்தால் மதம் மாறுவதை தவிர வேறு வழியில்லை என்று சில மாதங்களுக்கு முன் கூறியவர் தற்போது மாற்றி பேச காரணம் என்னவோ?

நூற்றாண்டுகளாய்த் தொடரும் இன இழிவிலிருந்து விடுதலை பெற அந்த இழிவுகளுக்கு அங்கீகாரமும், ஆதரவும், ஆன்மிக அந்தஸ்தும் கொடுத்துக் கொண்டாடுகின்ற மதத்தைத் துறப்பதுதான் ஒரே வழி.

டாக்டர் அம்பேத்கர் இதனைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்ததால்தான் இந்து மதத்தைத் துறந்து புத்த மதத்தை ஏற்றார்.

இப்போது அந்த சரித்திர முக்கியத்துவம் மிகுந்த நிகழ்வின் அறுபதாம் ஆண்டு தினத்தில் தலித்களின் விடுதலைக்காகப் பாடுபட்டு வருகின்ற தொல் திருமாவளவன் இவ்வாறு மதமாற்றத்துக்கு எதிராகக் கருத்துரைத்திருப்பது வேதனையான முரண்பாடு ஆகும்.

அவரின் கருத்துக்கள் அவரின் நிலைமையையும் மனோ நிலையையும் பிரதிபலிக்கின்றது . அவர் கருத்துகளை கூறுவதற்கு முழு சுதந்திரம் உள்ள தருணத்தில் ,

திருமா வை வரம்பு மீறி புகழ்ந்து அவர் தான் இஸ்லாமிய சமூகத்தின் காவலன் என்று முஸ்லிம் சமூகங்களை அவருக்கு காவடி தூக்க வைத்த முஸ்லிம் அறிவு ஜீவிகளுக்கு இந்தக் கருத்துகளை சமர்ப்பணம் ஆக்குகின்றேன்.

ஒன்று மட்டும் உண்மையாகிறது சாதியின் பெயரால் பிழவுகள் இருப்பதால்தான் இவர்கள் தலைவர்களாக வளம்வரமுடிகிறது

http://economictimes.indiatimes.com/…/article…/52028944.cms…


thiruma1_1849168f thirumavalavan-different-faces tirumavalavan-dancing-with-women
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.