முஸ்லிம்களின் வாக்குகள் இலியாஸ் அவர்களுக்கு விழுந்தால் வெற்றிபெற்றுவிடுவார்! -தெஹ்லான் பாக்கவிபட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் முகம்மது இலியாஸ் அவர்களுக்கு முஸ்லிம்களின் வாக்குகள் விழுந்தாலே வெற்றி பெற்றுவிடலாம் என மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி அவர்கள் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசினார்.


இன்று மாலை பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர் முகம்மது இலியாஸ் அவர்களை ஆதரித்து வீரக்குறிச்சி கிராமத்திலிருந்து மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி அவர்கள் தனது பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். இதில் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு, மதுக்கூர் போன்ற ஊர்களின் அருகே இருக்கும் சிறுசிறு கிராமங்கள் வழியாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட அவர் இறுதியாக அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு மணிநேரம் பேசினார் அப்பொழுது தனது உரையில் "பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருக்கும் ஏறத்தாள நாற்பதாயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை ஒற்றுமையாக கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் முகம்மது இலியாஸ் அவர்களுக்கு அளித்தால் வெற்றிபெற்று விடலாம். மேலும் கிரிஸ்த்துவ கிராமங்கள் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்" என புள்ளி விபரங்களுடன் பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில் அதிமுக, திமுக கட்சிகள் தோல்வி பயத்தால் முஸ்லிம்களின் ஓட்டுக்களை பிரிக்கின்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.


இதற்கு முன்னதாக பேசிய செயற்குழு உறுப்பினர் சித்தீக் அவர்கள் தனது உரையில் திமுக, காங்கிரஸ், பிஜேபி கட்சிகளின் ஊழல் முறைகேடுகளை பட்டியலிட்டதுடன் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் பி.ஜே.பி வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கடந்த முறை தனது சொந்த தொகுதியில் வெறும் ஆயிரம் ஓட்டுக்களை பெற்றதை குறிப்பிட்டு அதிமுக, திமுகவின் பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


கடைசியாக பேசிய இலியாஸ் தனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுகோள்விடுத்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

SDPI 02 SDPI 03 SDPI  08
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.