குதிரை நடனத்துடன் குதூகல திருமணம்!- படங்கள் இணைப்புராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் திருமணங்கள்  மற்றும் வேறு சில முக்கிய நிகழ்ச்சிகளில்  குதிரைகளை நடனமாட வைக்கிறார்கள். இந்த நாட்டியக் குதிரைகளை வளர்க்கும் பனைகுளத்தைச் சேர்ந்த சுல்தான் மைதீனிடம் பேசினேன்.

''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாட்டியக் குதிரைகள் பிரபலம். இவற்றை கல்யாணக் குதிரை என்றும் அழைப்போம். தற்போது ஒரு சிலர் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். எங்கள் பகுதிகளில் நடைபெறும் திருமணம், காதுக்குத்து, கோயில் கும்பாபிஷேகம், சுன்னத் கல்யாணம், ஏர்வாடி சந்தனக் கூடு போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னுடைய குதிரைதான் செல்லும். அவ்வளவு சிறப்பாக என்னுடைய குதிரைகள் நடனம் ஆடும். கடந்த 34 வருடங்களாக நான் இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன். என்னிடம் ஜெமினி, பக்கீர் அப்பா, ஐய்யனார் என மூன்று குதிரைகள் இருக்கின்றன. பெரியவன் ஜெமினிக்கு ஆறு வயது, கடைக்குட்டி பக்கீர் அப்பாவுக்கு மூன்று வயது, ஜெமினிக்கு எங்கள் பகுதியில் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது'' என்றவர் தொடர்ந்து...

'குதிரை நடனத்திற்கு சாதாரண நாட்களில் 7,000 ரூபாயும் முகூர்த்த நாட்களில் 30,000 ரூபாய் வரையும் கட்டணமாக வாங்குவோம். பனைக்குளம், புதுவலசை,அத்தியூத்து, அழகன்குளம், பெருங்குளம், வாணி, வலசை, சாத்தான் குளம் போன்ற ஊர்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் என்னுடைய குதிரையின் கால்ஷீட் கேட்டு வருவார்கள். இந்தக் குதிரைகளை மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வாங்குகிறோம். ஒரு குதிரைக்கு இரண்டு லட்சத்தில் இருந்து மூன்று லட்சம் வரை விலை நிர்ணயித்திருப்பார்கள். இவை நொக்ரா என்ற உயர் ரக இனத்தைச் சேர்ந்தவை. இவற்றை தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர போக்குவரத்துச் செலவு மட்டுமே 35, 000- த்தை தாண்டும்.  ஒவ்வொரு வேளையும் இவற்றிற்கு கோதுமை, கொள்ளு, ஐந்து கிலோ கேரட் கொடுக்க வேண்டும். பராமரிப்புச் செலவு அதிகம்தான். ஆனால் அதைப்பற்றிக் கவலை இல்லை, நன்றாக கவனித்துக்கொண்டால்தானே ஆரோக்கியமாக, அழகாக இருக்கும். சாப்பாடு சரியில்லை என்றால் குதிரையின் கவர்ச்சி குறைந்து அதன் மதிப்பை இழந்துவிடும்.
நிகழ்ச்சிகள் இல்லாத நேரங்களில் அவற்றிற்கு பயிற்சி கொடுப்போம். முதலில் நடனப் பயிற்சி, அடுத்து தாம்பூலத் தட்டில் நின்று ஆடும் பயிற்சி, மாலை நேரங்களில் கடற்கரைக்கு அழைத்துச்சென்று குளியல், பெயரைச் சொல்லி அழைத்தால் ஓடிவரும் பயிற்சி ஆகியவற்றைக் கொடுப்போம். நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகில் இருந்தால் நடக்க வைத்தே அழைத்துச் செல்வோம். தூரம் அதிகம் என்றால் சின்ன லாரியில் கொண்டு செல்வோம். அதற்குக் கால் வலிக்கக் கூடாதில்லையா... இதற்காக சொந்தமாக டாட்டா ஏஸ் வாங்கி வைத்திருக்கிறேன். குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே கல்யாண வீட்டிற்கு சென்று விடுவோம். மாப்பிள்ளை தயார் ஆனதும் குதிரை மேலே ஏற்றி வைத்து ஊரைச் சுற்றினால் நிகழ்ச்சி களைகட்டத் தொடங்கிவிடும். வெயிலினால் குதிரை சோர்வடைந்தால், உடனே குளுகோஸ் கொடுத்து புத்துணர்ச்சி ஊட்டுவோம். இறுதியில் மணமகள் வீட்டு முன் அசத்தலாக ஒரு நடனம் ஆடித் திருமணத்தை நிறைவு செய்யும் எங்கள் நாட்டியக் குதிரை'' என்றார் சுல்தான்.

 

K2(2)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.