தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 2.4% வாக்குகள் பெற்றதால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.


இது தொடர்பான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்த தேர்லில் ஒட்டுமொத்தமாக தேமுதிக 10,34,384 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. 2009-ல் 10.1 சதவீதமாக இருந்த ஒட்டு சதவீதம் தற்போது 2.4 சதவீதமாக குறைந்துள்ளது.


இதனால், தேமுதிகவின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழப்பதால் தேமுதிகவுக்கு முரசு சின்னம் நிரந்தரமாக கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும்.அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன?


தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிப்படி மொத்த தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு ஒரு எம்எல்ஏ இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் குறைந்தபட்சமாக 8 எம்எல்ஏக்களாவது இருக்க வேண்டும்.


அல்லது, போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள் மாநில முழுவதும் பதிவான ஓட்டுகளில் 6 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகிவிடும்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.