மோடியின் சான்றிதழில் உள்ள குளறுபடிகள்!பிரதமர் பதவி வகிக்க பிஏ, எம்ஏ சான்றிதழுக்கு எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் உண்மை பேசுபவராகவும் நாட்டின் சட்டங்களுக்கு மதிப்பு கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் தனது பதவியையே இழக்க நேர்ந்தது வாட்டர் கேட் ஊழலில். எனவே உலகம் முழுக்க உற்று நோக்கப்படும் ஒருவர் தனது தவறை மறைக்க மேலும் மேலும் தவறுகளை செய்ய முற்படக் கூடாது.
நேற்று அமீத்ஷாவும் அருண் ஜேட்லியும் இரண்டு சான்றிதழ்களை பத்திரிக்கைகளுக்கு வழங்கினர். அவர்கள் தயாரித்த இந்த போலி சான்றிதழ்களில் உள்ள தவறுகளை இங்கு பார்ப்போம்.
முதலாவதாக 1977ல் காண்பிக்கப்பட்ட மதிப்பெண்ணில் உள்ள பெயர் 'நரேந்திர குமார் தாமோதரதாஸ் மோடி'. ஆனால் இவர் வாங்கிய டிகிரியில் 'குமார்' விடுபட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழிலும், பட்டதாரி சான்றிதழிலும் பெயர்கள் வித்தியாசப்படுகிறது. பெயர் மாற்றம் மோடியே செய்திருந்தாலும் அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் இது பற்றிய விபரத்தை பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்திருக்க வேண்டும். இது பற்றிய தகவல் எதுவும் இல்லை.
இரண்டாவதாக பெயர் எழுதப்பட்ட வார்த்தைகளில் உள்ள தவறுகள். நரேந்திர மோடி என்ற பெயர் இரண்டிலும் வித்தியாசப்படுகிறது. போலியாக தயாரித்தவர்கள் அவசரத்தில் விடுபட்ட தவறுகள் இது.
மேலும் மோடி பிஏ படிப்பை 1975ல் ஆரம்பித்து 1978 ல் முடித்து பட்டம் பெற்றதாக கூறுகிறார். இந்த கால கட்டத்தில் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருந்தார். தேச விரோதிகள் சிறையிலடைக்கப்பட்டனர். ஆர்எஸ்எஸின் பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்எஸ்எஸ் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. 19 மாதங்கள் இது நீடித்தது. அந்த நேரத்தில் காவல் துறைக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்தாக நரேந்திர மோடியே தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். போலீஸூக்கு மறைந்து வாழ்ந்த ஒருவர் பப்ளிக்காக வந்து எப்படி பரீட்சை எழுதியிருக்க முடியும்? அவர் எங்கு பரீட்சை எழுதினார்?
நரேஷ் கவுர் என்பவரை பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அமீத்ஷா அறிமுகப்படுத்தினார். அதாவது நரேந்திர மோடி பரீட்சை எழுதுவதற்காக நரேஷ் குப்தாவோடு டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகமான ஏபிவிபி யில் தங்கியிருந்ததாக கூறுகிறார். இவர் குறிப்பிடும் ஜூன் 25 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நேரம். அன்றைய தினம் ஏபிவிபி அலுவலகம் அரசால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. அரசு சீல் வைத்த இடத்தில் மோடி எவ்வாறு நரேஷ் கவுரோடு தங்கியிருக்க முடியும்?
இவ்வாறு இவர்கள் சமர்பித்த சான்றிதழ்கள் பல கேள்விகளை எழுப்புகிறது. நாட்டு மக்களுக்கு உண்மையில் நடந்தது என்ன என்பதை அரசு விளக்க வேண்டும்.
-அஸ்தோஸ்
ஆம் ஆத்மி
தகவல் உதவி
என்டிடிவி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.