ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் ஆறு வகையான தேநீர்!!!



ஆறாம் விரலாய் சிகரெட் இல்லமால் கூட ஓர் ஆணை பார்த்துவிட முடியும். தேநீர் பருகாத ஆண்களை காண்பதுஅரிது. இதில், டீயும், சிகரெட்டும் இணைபிரியா பிறவிகளாக பழக்கம் வைத்திருக்கும் ஆண்கள் தான் அதிகம். ஒரு சிப் டீ, ஒரு ஃபவ் சிகரெட் என்பது பலரது பழக்கமாக இருக்கிறது. டீ என்பது ஆண்களின் வாழ்கையில் இருந்து பிரிக்க முடியாத காரியமாக இருக்கிறது எனில், அதை ஏன் நீங்கள் ஆரோக்கியமான வழியில் பின்பற்ற கூடாது? என்பது தான் நமது கேள்வி. ஆம், ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்கும் சில டீ வகைகள் இருக்கும் போது நீங்கள் அதை பின்பற்றி பயனடையலாமே…

செம்பருத்தி டீ

செம்பருத்தி வெறும் பூ மட்டுமல்ல, இது ஒருவகையான மூலிகையும் கூட. இது ஆண்களின் உடல்நலனை அதிகரிக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி சத்து நிறைய இருக்கிறது. மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

டார்ஜிலிங் டீ

டார்ஜிலிங் டீ நிறைய ஃப்ளேவர்களில் கிடைக்கிறது. நிறைய வகைகள் இருந்தாலும் கூட இது தரும் பயன் ஒன்று தான். டார்ஜிலிங் டீ மன அழுத்தத்தை குறைக்கவும், டைப் 2 நீரழிவு நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

இஞ்சி டீ

இரத்த ஓட்டம் அதிகரிப்பு, சீரிய குடலியக்கம் மற்றும் வயிறு சார்ந்த உபாதைகள் போன்றவற்றுக்கு நல்ல தேர்வு தருகிறது இஞ்சி டீ. இதில் வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் இதர மினரல்ஸ் சத்துகள் இருக்கின்றன.

எலுமிச்சை டீ

உடல் எடையை குறைக்க வெகுவாக உதவுகிறது எலுமிச்சை டீ. மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் இது உதவுகிறது.

ப்ளாக் டீ

இதயம், எலும்புகளின் வலிமை, மன அழுத்தம் குறைக்க, நோய் எதிர்ப்பை அதிகரிக்க, நீரிழிவு நோய் ஏற்படாமல் இருக்க என பல நன்மைகளை விளைவிக்கிறது ப்ளாக் டீ.

கிரீன் டீ

இந்த உலகிலேயே சிறந்த டீ எது என்றால், அது கிரீன் டீ தான். இதில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை. மற்றும் உடல் சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் சிறந்த டீயாக திகழ்கிறது கிரீன் டீ.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.