மஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்படும்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை எதிர்வரும்  திகதியின் பின்னர் நீக்கிவிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனை அறிவித்திருந்தார். அரசியல்வாதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லையென அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தையடுத்து மஹிந்தவின் பாதுகாப்பிலிருந்து இராணுவம் நீக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பை நீக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய சந்திப்பொன்றின் போது இராணுவ பாதுகாப்பை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Dailyceylon)


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.