முத்துப்பேட்டையில் பலத்த மழையால் கட்டிடம் இடிந்ததுமுத்துப்பேட்டையில் பலத்த மழையால் கட்டிடம் இடிந்து விழுந்தது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை தொடர்ந்து பெய்தது. அதன் பிறகு நேற்று மாலை வரை வெயில் அடிக்காமல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது இடையிடையே லேசான தூறல் விழுந்தது.

மழை காரணமாக நேற்று காலை முத்துப்பேட்டையில் காவலர்கள் குடியிருப்பு எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான பழமை வாய்ந்த கட்டிடத்தின் சன்ஷேடுகள் மற்றும் தடுப்பு சுவர்கள் பெயர்ந்து விழுந்தது. அப்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.இந்த கட்டிடத்தில் வியாபார கடைகள் உள்ளன. எனவே மீதி இடிந்து விழும் நிலையில் உள்ள சுவர்களை இடித்து அப்புறப்படுத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Muthupet 021 copy

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.