ஆக்ராவில் இந்து மதத்திலிருந்து தாய் மதம் திரும்பிய முஸ்லிம்கள்!ஆக்ராவில் கடந்த டிசம்பர் மாதம் இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம்கள் மீண்டும் தங்களது மதத்துக்கு மறு மதமாற்றம் செய்து கொண்டனர்.

ஆக்ராவில் கடந்த கிறிஸ்தமஸ் தினத்தன்று மாபெரும் மத மாற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் மத மாற்றம் செய்துகொண்டனர். இதில் மஹூர் லத்தியா கிராமத்தைச் சேர்ந்த 'நத்' வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்களும் அடங்குவர். இந்து மதத்துக்கு மாறினால் நிலம் வழங்கப்படும் என்று இந்துதுவ அமைப்பின் தலைவர் வாக்குறுதி அளித்ததன் பேரில் இவர்கள் அந்த நிகழ்ச்சி நடந்தபோது இந்து மத்துக்கு மாறினர்.

இந்த நிலையில் தற்போது சுமார் 17 முஸ்லிம்கள் இந்து மதத்திலிருந்து மீண்டும் மறு மதமாற்றம் செய்து கொண்டுள்ளனர். மறு மதமாற்றம் செய்துகொண்ட முதியவர் ராமாத் கூறும்போது, "அலி முகமது என்றவர் எங்களது குடும்பத்தினரை மதமாற்றம் செய்துகொள்ளும் படி கூறினார்.
நிலம் தருவதாக இந்துதுவா தலைவர்கள் கூறினர். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை. எங்களது சமூகத்தை சேர்ந்தவர்களும் எங்களை ஒதுக்கி தள்ளினர். திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களை உறவினர்கள் அழைப்பதில்லை. அதனால் திரும்பவும் எங்களது மதத்துக்கு மாறி விட்டோம்" என்றார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த கிறிஸ்தமஸ் தினத்தன்று 100 இஸ்லாமியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மத மாற்றம் செய்துகொண்டால் ஆதார் அட்டை, பணம், நிலம் ஆகியவை வழங்கப்படும் என்று நிகழ்ச்சியை நடத்திய இந்துதுவ அமைப்புகள் அறிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
தகவல் உதவி

தமிழ் இந்து நாளிதழ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.