முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவாரூர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம்தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையை சேர்ந்தவர் ரவி (வயது50). இவர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மீது தீவிர விசுவாசமும், பற்றும் கொண்டவர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதையொட்டி வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படம், தனது படத்தை வைத்து ஆடுதுறை கடைவீதியில் ஒரு பிளக்ஸ் போர்டு வைத்திருந்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி வைத்திருந்த பிளக்ஸ் போர்டு வாட்ஸ்-அப், டி.வி.களிலும் வெளியானது. இதன் எதிரொலியாக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் உத்தரவின்பேரில் ரவியை முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து திருவாரூர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.