அஜ்மீர் தர்ஹா பொருப்புதாரர்கள் நரேந்திர மோடியை சந்தித்தனர்அஜ்மீர் தர்ஹாவை நிர்வாகம் செய்யக் கூடிய பொருப்புதாரர்கள் நரேந்திர மோடியை சந்தித்தனர். அவரை சந்திக்க செல்லும் போது காவி சால்வை அணிந்து சென்றிருப்பதையும் பாருங்கள். இது போன்ற மாற்றங்களைத்தான் இந்துத்வாவாதிகளும் விரும்புகின்றனர். நரேந்திர மோடியும் தனது தளத்தில் இந்த சந்திப்பை பெருமை பொங்க குறிப்பிட்டுள்ளார். குஜராத்தில் 2000 முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்பட தனது அரசும் தானும் முக்கிய காரணம் என்பதை தெரிந்தும் தன்னை சந்தித்ததில் அவருக்கே ஆச்சரியமாக இருந்திருக்கும்.

தர்ஹா வணக்கம் என்பதே இஸ்லாத்துக்கு விரோதமானது என்பதை நாம் பலமுறை சொல்லி வந்துள்ளோம். ஷியாக்களும், தர்ஹா வணங்கிகளும் நரேந்திர மோடியோடு நெருக்கமாக இருப்பதை கவனியுங்கள். மோடியின் அமைச்சரவையில் இருக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிகளும் ஷியா இனத்தை சேர்ந்தவர்களே!

சில ஆண்டுகள் முன்பு அஜ்மீர் குடும்பத்தோடு சென்றிருந்தேன். அங்கு இந்த புரோகித கூட்டம் அப்பாவி மக்களிடம் பணம் பிடுங்குவதை நேரிடையாக கண்டேன். இஸ்லாமிய நடைமுறை ஏதும் எனக்கு தென்படவில்லை. தாயாரின் வற்புறுத்தலுக்காக அங்கு சென்றோம். உடன் அங்கிருந்து டெல்லி கிளம்பி விட்டோம். இறைவன்தான் இந்த தர்ஹா விரும்பிகளுக்கு நேர் வழியைக் காட்ட வேண்டும்.

ajmir
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.