வங்கத்தின் வஞ்சம் இனியும் தொடருமா ?



1.இஸ்லாத்தின் முதன்மை விரோதி “ஏகாதிபத்தியமே”. அது இயல்பான விரோதியும் கூட. ஏகாதிபத்தியத்தின் அடிப்படை பண்புகள் மூன்று. 1. வட்டியை மையமாகக் கொண்டியங்குதல். 2. நாடுகளை கைப்பற்றல். 3. அங்குள்ள வளங்களை சுரண்டி தனது தேசத்திற்கு கொண்டு செல்லுதல். இந்த மூன்றையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது. அதனால் தான் ஏகாதிபத்தியம் இஸ்லாத்தின் விரோதியாகி போகிறது. .


2.இஸ்லாத்தை வலுவிழக்க செய்ய வேண்டும் என்றால் அது கூறும் சட்டங்களை இல்லாதொழித்து மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்ற பொறி முறையில் அது உறுதியாக இருக்கிறது.

3.ஏகாதிபத்தியங்களின் தெற்காசிய சுரண்டல் வர்த்தகத்தின் இன்றைய இலக்கு பங்களாதேஷ். நேற்றைய நீக்ரொய்ட் அடிமை சந்தையை பங்களாதேஷ் முஸ்லிம்களின் வறுமை மீண்டும் காலணித்துவவாதிகளிற்கு உருவாக்கியுள்ளது .

4.உற்பத்தி தொழிற்சாலைகளிற்கான மலிவான தொழிலாளர் பட்டாளம், மற்றும் உற்பத்தியினால் ஏற்படும் கழிவுகள், சூழல் மாசடைவுகளை தங்கள் தேசத்தில் தவிர்த்து கொள்ளல் என்று அவை வங்கம் முழுதும் விரிந்து வருகின்றன. .

5.ஒரு முஸ்லிம் மற்றொருவனிற்கு அடிமைத்தனமாக செயற்பவதை இஸ்லாம் தடைசெய்கிறது. இதனை இல்லாமல் செய்ய, ஷரியத் சட்டத்தை பங்களாதேஷில் உருவாக்க முயலும் அதன் இஸ்லாமிய தலைவர்களை இலக்கு வைத்துள்ளது ஏகாதிபத்தியம். அதன் 06-வது பலிக்கடாவாக நேற்று ஒருவரை மீண்டும் இழந்து விட்டது அந்த தேசம். .

6.ஹஸீனா அரசின் பின்னால் இஸ்லாம் வங்கத்தில் இருந்து துடைத்தெறியப்படல் வேண்டும் என்ற தெளிவான கருத்தில் இருக்கிறது ஏகாதிபத்திய தேசங்கள்.

7.அதற்கு முதற்படியாக இஸ்லாமிய ஆட்சியல், அதன் அதிகாரத்திற்கான கோட்பாட்டியல், இஸ்லாமிய அஷ்-ஷரிய்யா சட்டங்களை அமுல் செய்ய முயலும் சிந்தனைகள் என்பவற்றை அடியோடொழிக்க முயல்கிறது இந்த ஏகாதிபத்தியங்கள். .

8.எகிப்து பாணியில் ஆட்சியாளர்களிற்கு இஸ்லாம் மீதான வெறுப்பை உருவாக்கி மதச்சார்பற்ற தன்மை மீதான பற்றை உருவாக்கும் நிகழ்ச்சி நிரல் ஊடாக இஸ்லாத்தின் அதிகாரத்தை நோக்கிய பாதைக்கு வியர்வை சிந்தும் மனிதர்களை இரத்தம் சிந்த வைக்கின்றன இந்த ஏகாதிபத்தியங்கள்.

9.வங்காள தேசம் போன்ற பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளின் அரசியலில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய ஏகாதிபத்திய பாசிச ஹசீனா அரசிற்கு எதிராக தேர்தலில் நின்றவரே . இறுதியில் ஹசீனா அரசால் தூக்கில் ஏற்றப்பட்டு வீரமரணம் அடைந்த கல்வியாளர்
முதீயுர்ரஹ்மான் நிஜாமி.

10.இஸ்லாமிய தலைவர்களின் நோக்கம் வேறு ! செயல்படுத்த துடிக்கும் மிசன் வேறு !நமது காலத்தில் நாம் சிந்திக்கும் விடயமும் , எடுக்கும் முடிவும் வேறு !

11.முஹல்லாவில் மக்களை ஒருங்கிணைக்கும் காலம் வரும் பொழுதும் , விகிதாச்சார அடிப்படையில் உரிமையை கேட்காமல் அதிகாரமாக பெரும் சூழல் வரும் போதும் தன்னிறைவான சமூக சூழல் வரும் .

12.முஸ்லிம்கள் கீழ் தலைமை அமைவதை ஒரு போதும் அதிகார வர்க்கம் சகித்துக் கொள்ளாது . அவற்றை எல்லாம் எதிர்கொள்ள இன்றும் தேவை கொள்கை நம்பிக்கையை நிருபிக்கும் தலைவனும் தலைமையும் !

 


தொகுப்பு - அபூஷேக் முஹம்மத்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.