முஸ்லிம்கள் எப்படி எல்லாம் பழி வாங்கப் படுகிறார்கள்...?வாக்குச் சீட்டுக்களில் அடையாள அட்டை களிலும் வேண்டு மென்றோ அல்லது அலட்சியத்தாலோ முஸ்லிம் பெயர்களை தாறுமாறாக எழுது கிற போக்கும், அதையே காரணம் காட்டி அவசியமான உரிமைகளை மறுக்கும் போக்கும் பரவலாக இருக்கிறது.


· Mohmad என்பதையும் mohmed என்பதையும் ஒரு பெரிய ஆள்மாறாட்டமாக கருதி ஆவணங்களை நிராகரிக்கிறார்கள். பொதுவான சாமாண்ய முஸ்லிம்கள் பெரிதும் பாதிப்புக்க்குள்ளாகியிருக்கிற விச்ய்ம இது,


இன்றைக்கு வாக்கு சாவடியில் ஒரு தகராறு . வரலாறு படிச்ச நீங்க அலாவுதீன் என்ற பெயரை சரியாக எழுதாமலா வெற்றி பெற்றீர்கள். ஆவணங்களில் எழுதும் போது ஏன் சார் தவறாக எழுதுகிறீர்கள் என்று ஒருத்தர் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்.


அப்பா பெயர் சரியில்லை தெருப் பெயர் சரியில்லை என்று பல வாக்காளர்களும் திருப்பி அனுப்ப பட்டனர்.

தேர்தலுக்கு முன்னாள் தேர்தல் கமிஷன் வழங்கிய பல வாய்ப்புக்களை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு இன்று வாக்குச் சாவடிக்கு வந்து அதிகாரிகளிடம் சிலர் தகறாறு செய்தனர் அது வாக்களர்களின் குறைபாடு என்றாலும். இது விச்யத்தில் கீழ் மட்ட ஊழியர்களின் அலட்சியத்த்திற்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது,


என்னுடை ஆதார் அட்டைக்கு அட்ரஸ் எழுதும் போது al ameen colony என்று பதியுமாறு எத்தனை தடவை கூறும் ஏற்கெனவே al amin colony என்று தான் போட்டுவிட்ட்தாக ஒரே வார்த்தையை சொல்லி திருப்பினார் ஒரு ஊழியர், எங்களது பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் பேருக்கு இப்படி ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இருக்கிறது,. இந்த அட்டையை கொண்டு போய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் எத்தனை சிரம்ம் ஏற்படும்?


ஒரு பார்வையில் இதை சரி செய்து கொண்டு வா என்று சொல்லி தூக்கி வீசிவிடுவார்கள்...

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.