மனு சாஸ்த்திரம் (சமசுகிருதம்: மனுஸ்மிருதி) என்றால் என்ன?நமக்கு தேவையில்லாத ஒன்று தான் இருந்தாலும் மக்கள் அறிய வண்டி

 

மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்: மனுஸ்மிருதி)
இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும்.

இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழில் திருலோக சீதாராம் என்பார் மொழி பெயர்த்துள்ளார். தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இது. இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது.

மனுநீதிச் சோழன் இதனை முழுமையாகப் பின்பற்றி ஆட்சி செய்ததாக போற்றப்படுகிறான். இந்து தத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களை வலியுறுத்தும் மேட்டுக்குடியினரின் உத்தியாக இதனை விமர்சிப்பவர்களும் உள்ளனர்.
Thanks To: ==விக்கிபீடியா==
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.