நெளுந்தெனிய பள்ளிவாசல் மீது குண்டுத்தாக்குதல்கொழும்பு-கண்டி பிரதான வீதியில் அமைந்திருக்கும் நெளுந்தெனிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் இந்தக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறிய ரக பெட்டியொன்றுக்குள் மறைத்து வைத்து குண்டுவெடிக்க வைக்கப்பட்டிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மேலும் எதுவித தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களை அச்சுறுத்தும் நோக்கில் அல்லது இரு இனங்களுக்கிடையிலான பதட்ட நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் இந்தக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.