தேர்தலை புறக்கணித்த கிராமம்: ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை!திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தினர் வாக்குபதிவு செய்யாமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட மிட்டகண்டிகை கிராமத்தில்,586 வாக்குகள் உள்ளன.

அங்கு காலை முதல் ஒருவர் கூட வாக்குச் செலுத்த வரவில்லை.

கடந்த20 ஆண்டுகளாக தங்கள் கிராமத்திற்கு குடிநீர், சாலை, பேருந்து உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்ததாகவும் மிட்டகண்டிகை கிராம மக்கள் கூறுகின்றனர்.

வாக்களிப்பதற்கு யாரும் வரவில்லை என்பதை அறிந்து, திருத்தணி வட்டாட்சியர் ஆசீர்வாதம் அங்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே, வாக்களிக்கப் போவதாக மிட்டகண்டிகை கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.