இறுதி சுற்றுக்கு அதிரை மாணவர்கள் தேர்வு!கும்பகோணத்தில் வருகின்ற 24 ஆம் தேதி ஜமாஅத்துல்  உலமா சபை மற்றும் சென்னை மக்தப் தஃலீம் கமிட்டி இணைந்து  மக்தப்  விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது . இதில் கிராஅத் உள்ளிட்ட மார்க்க ரீதியிலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வானவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன . இந்நிலையில் கும்பகோணத்தில் நடைபெற உள்ள கிராஅத் போட்டியில் அதிரையை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கு பல்வேறு சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த 11.05.2016அன்று பட்டுகோட்டை ரயிலடி பள்ளிவாசலில் நடைபெற்ற இறுதி சுற்றில் நமதூரை சார்ந்த அஜ்மீர் ஸ்டோர் ஷாகுல் ஹமீதுடைய மகன் S.அஸ்பஃக் அஹமது மற்றும் முஹம்மது நெய்னா ஆலிம் அவர்களுடைய மகன் M.அப்துல் ஜப்பார் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்கள்  24ஆம் தேதி நடைபெற உள்ள கிராஅத் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறைமையை வெளிபடுத்த உள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.