அதிரையில் ராணுவ அணிவகுப்பு !நடைபெற உள்ள  தேர்தலில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைப்பெறாமல் இருக்க மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தீவிர பாதுக்காப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதிக்கு உட்பட்ட இரண்டு வாக்கு சாவடிகள் பதற்றமானவை  மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.


இதன் காரணமாக அதிராம்பட்டினத்தில் தீவிர பாதுக்காப்பு வழங்கிட மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆனந்த் மேனன் உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி  இன்று காலை அதிராம்பட்டினத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக மத்திய தொழில் பாதுகாப்பு படையை (CISF) சேர்ந்த நூற்றுகனகான ராணுவ வீரர்கள் அணிவகுத்து சென்றனர் .


இதுகுறித்து அணிவகுப்பில் சென்ற அதிரை காவல்துறை துணை ஆய்வாளர் சுந்தர்  கூறுகையில் இந்த அணிவகுப்பு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக நடத்தபடுகிறது என்றார். மேலும் இந்த அணிவகுப்பு வண்டிபேட்டை முதல் கடைதெரு காலேஜ் முக்கம் வழியாக சென்று பேருந்து நிலைய வளாகத்தை சென்றடையும் என்றார்.


AD 02 AD 03
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.