அதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் உறுதி கப்பல் போக்குவரத்து துறைமுகம் கொண்டுவர முயற்சி செய்வேன்....அதிராம்பட்டினம் நகர பகுதிகளில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் நேற்று வாக்கு சேகரித்தார். அதிராம்பட்டினம் பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளான காமாட்சியம்மன் கோவில் தெரு, பிள்ளைமார்தெரு, சங்கத்துக்கொல்லை, சுப்பிரமணியர் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சால்ட் லையன், காந்திநகர், பாரதியார் தெரு, சேதுரோடு, சிவன் கோயில் தெரு, கடற்கரை தெரு, தரகர் தெரு, ஹாஜாநகர், ஆறுமுககிட்டங்கி தெரு, பெரியகடைத்தெரு, தக்குவாபள்ளி ரோடு, கல்லூரி முக்கம், நெசவுக்காரத்தெரு, புதுத்தெரு, மேலத்தெரு, சின்ன நெசவுக்காரத்தெரு, நடுத்தெரு, புதுமனைதெரு, ஆலடி தெரு, சி.எம்.பி லையன், செட்டித்தோப்பு, வெற்றிலை காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதிநேர மருத்துவமனையாக செயல்படுவதை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் முழுநேர அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவேன். மீனவர்களின் நலன்காக்கும் வகையில் அதிராம்பட்டினத்தில் ஒரு உயர்கோபுர கலங்கரை விளக்கம் அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்வேன். அதேபோல் அதிராம்பட்டினத்தில் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கப்பல் போக்குவரத்து துறைமுகம் கொண்டுவர முயற்சி கொள்வேன்.

அதிராம்பட்டினம் காந்திநகர், கரையூர்தெரு பகுதிகளிலிருந்து கடலுக்கு செல்லக்கூடிய வாய்க்கால் ஒன்றரை கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த வாய்க்கால் 40 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. அதன்பிறகு தூர்ந்துபோய்விட்டது. இந்த வாய்க்கால் தூர்வாரப்பட்டு புதுப்பிக்கப்படாததால் மழை, வெள்ள காலங்களில் மீனவ கிராம பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை, வெள்ளம் சூழ்ந்து நிற்கும் அபாயம் இன்றளவிலும் உள்ளது. இந்த வாய்க்காலை தூர்வாரி, அகலப்படுத்தி கான்கிரீட்டுடன் கூடிய வாய்க்காலாக புதுப்பித்து தருவேன் என்றார்.

அதிராம்பட்டினம் பேரூர் திமுக செயலாளர் ராமகுணசேகரன், அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் அஸ்லம், அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் தலைவர் ஜலீலா முகைதீன், மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் நகர செயலாளர் ஹாலிது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிராம்பட்டினம் நகர தலைவர் ஹாஜா மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.