இலங்கையின் முதலாவது இஸ்லாமியப் பெண் விமானி!- படங்கள் இணைப்புமட்டக்களப்பு மாவட்டம் புதிய காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொன்ட றீமா பாயிஸ் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் விமானியாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விமானியாகும் முயற்சியின் முதற்கட்டமாக லண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன் கிளைடிங் கிளப்) இல் இணைந்து ஒரு வருடப் பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.

கடந்த வாரம் தான் பறக்கும் விமானத்தில் பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து பரசூட் மூலம் குதித்து தனது சாதனையை ஆரம்பித்த றீமாபாயிஸ் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபபட்டு வருகின்றார். தற்போது சிறிய ரக விமானத்தில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர் விரைவில் விரைவில் பிரித்தானிய பெண் விமானப் படையில் இணைந்து விமானப் பயிற்சியில் இணைந்து கொள்ளவுள்ளார்.

இலங்கையில் இஸ்லாமியப் பெண்ணாகப் பிறந்து லண்டனில் சாதனைகள் படைக்கும் றீமாபாயிசுக்கு நாமும் வாழ்த்துக்களைக் தெரிவிக்கின்றோம்.

 

 

Lanka Ledy skydiving-890x395
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.