அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ரத்து: காங்கிரஸ் கண்டனம்பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் ஜூன் 13-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தும்படி அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. ஜூன் 1-ல் தேர்தலை நடத்தலாம் என தமிழக ஆளுநர் ரோசய்யாவும் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்தார்.

ஆனால், ஆளுநரின் பரிந்துரையை புறக்கணித்த தேர்தல் ஆணையம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது நிரூபணமானதால் தேர்தலை ரத்து செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி சென்னையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்தது கண்டனத்துக்குரியது என்றார்.

மேலும், முன்கூட்டியே தேர்தலை நடத்தலாம் என ஆளுநர் பரிந்துரை செய்ததை தேர்தல் ஆணையம் எதிர்ப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.