இஸ்லாமிய மதபோதகரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிரிட்டீஸ் பிரதமர்.....!!பிரிட்டனை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகரான சுலைமான் கனி என்பவரை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைத்து பேசியதற்காக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் கேமரூன் பேசும்போது...


இஸ்லாமிய மதபோதகரான சுலைமான் கனி என்பவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்’ என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

பிரதமரை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளரான மைக்கேல் ஃபாலனும் இதனை உறுதிப்படுத்தி பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதமரின் குற்றச்சாட்டால் அதிர்ச்சி அடைந்த சுலைமான் கனி தனது வழக்கறிஞர்கள் மூலம் பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மீது வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் தனது கருத்திற்கு மன்னிப்பு தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளரை தொடர்ந்து பிரதமர் கேமரூனும் சுலைமான் கனியை ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைத்து பேசியதற்காக மன்னிப்பு கோருவதாகவும், இடையில் ஏற்பட்ட தவறான புரிதலுக்காக தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் கமெரூன் தெரிவித்துள்ளார்


 

தகவல் உதவி : காலைமலர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.