ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த ஆட்டோ ஓட்டுனர் மகன் - அன்சார் சேக்ஆட்டோ ஓட்டுனரின் மகன் ஒருவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். புனேவில் உள்ள  ஜல்னா பகுதியை சேர்ந்தவர் அன்சார் சேக். சாதாரண ஆட்டோ டிரைவரின் மகன். இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த அன்சார் சேக், சராசரி இளைஞர்களை போல பட்டப்படிப்பை முடித்த பிறகு ஏதோ ஒரு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து கொள்வோம் என்று நினைக்கவில்லை. மத்திய அரசு நடத்தும் சிவில் சர்வீசஸ் எனப்படும் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்ற தீராத தாகம் அன்சார் சேக்கிடம் இருந்தது. எனவே அன்சார் சேக் எப்படியாவது கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புனே வந்து இறங்கினார்.

தங்க இடம் தேடி அலைந்த போது அன்சார் சேக் என்ற தனது பெயரை மறைத்தார். யாராவது உனது பெயர் என்ன என்று கேட்டால் என் பெயர் ‘சுபாம்’ என்ற தனது இந்து நண்பனின் பெயரை சொல்லத் தொடங்கினார். அதன் பிறகு அவருக்கு தங்குவதற்கு இடம், மெஸ் கிடைத்தது. இதையடுத்து கடுமையாக உழைத்த அன்சார் சேக், நடைபெற்று முடிந்த யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதினார். இதில் நாட்டிலேயே 361-வது இடம் பெற்று சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.