குழந்தைகள் வெயிலில் விளையாடுவதனால் அவர்களுக்கு விட்டமின் D கிடைக்கப் பெறும்.வளர்கிற பருவத்தில் வெயில் படாமல் இருப்பது குழந்தைகளுக்கு பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்படியே வெளியில் விளையாடினாலும் மாலை 3:00 முதல் 5:00 மணி வரை தான் வெயிலில் விளையாடுகின்றனர்.


இந்த வேளை வெயில், போதுமான விட்டமின் 'டி'யைஉற்பத்தி செய்யாது. சூரியனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்கள், விட்டமின்டி உற்பத்தியை தூண்டுவதற்கான சரியான நேரம் காலை,10:00 முதல் மதியம் 2:00 மணி வரை தான்.


விட்டமின் டி குறைபாடு இருந்தால் எலும்பு, பற்களில் போதிய வளர்ச்சி இருக்காது. அல்லது தாமதமான வளர்ச்சி இருக்கும்.


இதனால் இதயப் பிரச்னை, தொற்றுகள், புற்றுநோய், காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. வெயிலில் வேலை செய்வோரை தவிர, நம்மில் பெரும்பாலானோருக்கு போதுமான அளவு புறஊதாக் கதிர்கள் பகல் வெயில் மேலே படுவதில்லை.


வைட்டமின் டி குறைபாடு பெண் குழந்தைகளுக்கு இருந்தால், இடுப்பு எலும்பில் இறுக்கத்தை ஏற்படுத்தும்.


இது குழந்தைப் பேறுசமயத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். உணவு அல்லது மாத்திரைகள் மூலம் கிடைப்பதை விடவும் இயற்கையான வழியில்சூரிய ஒளி மூலம் விட்டமின் டி கிடைப்பதுதான் ஆரோக்கியமானது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.