சவுதியில் பதிவு செய்யப்படாத STC சிம்கள் முடக்கப்படும்.உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து, கைரேகைகள் பதிவு செய்யப்படாத சிம்காட்கள் முடக்கப்படும் என சவுதி அரேபியாவின் மிகப் பெரும் தொலைபேசி வலையமைப்பான சவுதி டெலிகொம் தெரிவித்துள்ளது.


சவுதி டெலிகொம் ( STC) உப தலைவர் பைசல் அல் ஜபர் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,


தற்போது அனைத்து (STC) சிம் பாவனையாளர்களுக்கும் சிம்களை தங்களது பெயரில் பதிவு செய்யுமாறும், கைரேகைகளை பதிவு செய்யுமாறும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது அதனை ஒரு பொருட்டாக கருதாத அனைத்து சிம்களும் முடக்கப்படும். ஆகவே உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உங்களது சிம்களை உங்கள் பெயரில் பதிவு செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.


சவுதியில் அதிகமானோர் Black Market இல் பதிவு செய்யப்படாத சிம்களைப் பெற்று அதனை தனது சொந்தப் பெயரில் மாற்றாது பாவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.